பாதி நன்மைகள்
சதீஷ்குமார் சீனிவாசன்
₹200.00 ₹180.00
நீ எறும்புகளாய் பிறந்திருக்கிறாய்
ஓடி ஓடி அலைந்து களைத்திருந்த
உன் எறும்புகள்
நிச்சயமின்மையின் மழையில்
இப்போதும் அனாதியாய் இறந்துகொண்டிருக்கின்றன
சின்னஞ்சிறிய சீனிப்பரல்களை
புற்றில் சேர்க்க முடியாத துயரத்துடன்
தெளிவான படிமங்களின். காலகட்டத்தில் இருந்து குழம்பும் படிமங்களின் காலகட்டத்திற்குக் கவிதை வந்திருப்பதைக் காட்டும் படைப்பு இது. அதை பிரித்து அடுக்க முற்படுவது வாசிப்பல்ல. தவிப்பை உண்டவை பசியறாது பிறந்து மீண்டும் தவித்தலைகின்றன. தவிப்பு தன்னை உணவாக்கி உண்டவைகளாக உருமாறி தவிப்பெனப் பரவியிருக்கிறது.
மறுபக்கம் மிக எளிமையான நேரடிக் கவிதைகளையும் சதீஷ்குமார் சீனிவாசன் எழுதியிருக்கிறார். இத்தகைய கவிதைகளில் மொழியின் வசீகரமும் வீச்சுமே அவ்வுணர்ச்சிவெளிப்பாட்டைக் கவிதையாக்குகின்றன. கூடவே வரும் படிமங்கள் எளிமையானவையாக இருக்கவேண்டும். இரவென பெருகும் மௌனத்தில் இரவென பெருகும் கூந்தலுடன் வருபவளைப்போல
– ஜெயமோகன்
சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகள் நம்பிக்கைகளும் கனவுகளும் முற்றிலும் சிதறுண்ட காலத்தில் அலைவுறும் மனதின் தத்தளிப்புகளும் மீட்சிக்கான பரிதவிப்புகளும் கொண்டவை. தன்னை ஒரு மையத்தில் பொருத்திக் கொள்ள முடியாத நிம்மதியின்மையும் பதற்றங்களும் கொண்ட அவரது கவிதைமொழி பெருநகரங்கள் உருவாக்கும் அன்னியமாதலையும் சுதந்திர உணர்வையும் ஒருங்கே கொண்டவை. காமத்தின் உவர்ப்பும் கண்ணீரின் உப்பும் எதிர்ப்புணர்வின் கசப்பும் நவீனத்துவம் மிக்க மொழியின் நுட்பங்களோடு இணைந்து அவரை தனித்துவமான ஒரு கவிஞராக உணரச் செய்கின்றன.
– மனுஷ்ய புத்திரன்
Reviews
There are no reviews yet.